சிவில் பதிவுகள்

சிவில் பதிவுகள் மூன்று பகுதிகளாகும். அவையாவன,

 1. பிறப்பு
 2. இறப்பு
 3. திருமணம்

 

 1. பிறப்பு பதிவு செய்தல் மற்றும் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்தல்.

பிந்திய பிறப்புகளை பதிவு செய்தல் பிறப்புகளை பதிவு செய்தல் சட்டத்தின் 24ஆம் பிரிவின் படியும் பிறப்புச் சான்றிதழ்களை திருத்தங்கள் செய்தல் சட்டத்தின் 27, 27 (அ), 36, 52(1) மற்றும் 53 பிரிவின் அடிப்படையில்  மேற் கொள்ள முடியும்.

இது சம்பந்தமாக வேண்டப்படும் ஆவணங்களாவன,

 • பிறப்புப் பதிவுகள். (வைத்தியசாலையால் அல்லது கிராம சேவகரால் வழங்கப் பட்ட)
 • சுகாதார வளர்ச்சி அட்டை.
 • மாணவர்  முன்னேற்ற அட்டை.
 • காலியான   பெறுபேற்றுத் தாள்.
 • தந்தை/தாயின் பிறப்புச் சான்றிதழ்.
 • தந்தையினதும் தாயினதும் திருமணச் சான்றிதழ்.
 • சத்தியக் கடதாசிகள்.
 • ரூபா 50/= பெறுமதியான கட்டணம்.

(I) பெயர் அல்லது குடும்பப் பெயரை திருத்துவதற்காக வேண்டப்படும் ஆவணங்கள்.

 • செய்தித் தாள் விளம்பரம்
 • கிராம சேவகரால் உறுதிப்படுத்திய அறிக்கை
 • விண்ணப்பப் படிவம்
 • வங்கிப் புத்தகம்
 • சமாதான நீதவானின்  முன்னால் சத்தியம் செய்கின்ற சத்தியக் கடதாசி.
 • மூல பிறப்புச் சான்றிதழ்.
 • சரியான பெயரை ஒரு வருடத்துக்கு மேலாக பயன்படுத்தியதற்கான மூன்று சாட்சிகள்.
 • ஏழு வயதுக்கு குறைந்த ஒரு பிள்ளையாயின் ஆறு மாதங்களுக்கு உட்பட்ட  ஒரு சாட்சி.
 • விண்ணப்பதாரியின் முகவரி குறிப்பிடப்பட்ட முத்திரையொட்டிய ஒரு கடித உறையும்  கோப்பு அட்டையொன்றும்.

(II)பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் விபரங்கள் மற்றும் பிறந்த திகதியில் திருத்தங்கள் மேற் கொள்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.

 • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களினதும் திருமணச் சான்றிதழ்களினதும் மூலப் பிரதிகள்.
 • திருத்த வேண்டிய பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
 • தந்தையின் விபரங்கள் உள்ளடக்கப் படாவிடின்  அவற்றை உள்ளடக்க சமாதான நீதவானின் சத்தியக் கடதாசி கட்டாயம் அவசியம்.
 • கிராம சேவகர் உறுதிப் பத்திரம்.
 • ரூபா 50/= கட்டணம்

 1. இறப்புகள் பதிவு செய்தலும் இறப்புச் சன்றிதழ் திருத்தங்கள் செய்தலும்.

பிந்திய மரணங்கள் பதிவு செய்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவின் படியும் இறப்பிச் சான்றிதழில் திருத்தங்கள் மேற் கொள்ளல் சட்டத்தின் 52(1) பிரிவின் படியும் மேற்கொள்ளப்படும்.

(I) பிந்திய மரணங்கள் பதிவுக்கான ஆவணங்கள்.

 • இறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழ்.
 • வைத்தியசாலையால் வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்.
 • பிரதேச செயலாளர் மேலொப்பமிடப்பட்ட கிராம சேவகர் சான்றிதழ்.
 • மரண அறிவித்தல்.
 • இறப்புப் பொருட்கள் வாங்கிய சிட்டை
 • மரண நலன் புரிச்சங்கத்தின் கடிதம்.
 • இறுதிக் கிரியைகளுக்கு சமூகமளித்த மகா சங்கத்தினரின் அல்லது மதகுருமார்களின் கடிதம்.
 • ரூபா 50/= கட்டணம்

 1. விவாகம் 

விவாகம் மூன்று வகைப்படும்.

 1. கண்டிய விவாகம்
 2. சாதாரண விவாகம்
 3. முஸ்லிம் விவாகம்

இதில் கண்டிய திருமணங்களை பதிவு செய்தல், விவாக தீர்ப்புக்களை வழங்கல், சான்றிதழ்களில் திருத்தங்களை மேற்கொள்ளல் போன்றன பிரதேச செயலாளரால் மேற்கொள்ளப்படும்.சாதாரண திருமணங்களைப் பதிவு செய்தல் பதிவாளர்களால் மேற்கொள்ளப்படினும் விவாகரத்து மற்றும் சான்றிதழில் திருத்தங்கள் செய்தல் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்கொள்ளப்படும். முஸ்லிம் விவாகம், விவாகரத்து பற்றிய அதிகாரங்கள் முஸ்லிம் குவாஸி நீதவான்களால் பிரயோகிக்கப்படும்

 விவாகப் பதிவுக்கான கட்டணம் ரூபா 1150/=

 

திருமணச் சான்றிதழ்
[PDF - 0.0 KB]

 

சான்றிதழ் பிரதிகள் வழங்குவதற்கான கட்டணங்கள்.

பதிவு இலக்கமும் திகதியும் தெரிந்திருந்தால் -  100/= (ஒரு பிரதிக்கு)

பதிவு இலக்கமும் திகதியும் தெரியாதிருந்தால் - 200/= (ஒரு பிரதிக்கு)

 

 

 

News & Events

28
ஆக2017
தொழில் சந்தை

தொழில் சந்தை

   பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டுடன் திறன்கள்...

28
ஆக2017
புது வருடக் கொண்டாட்டம் - 2019

புது வருடக் கொண்டாட்டம் - 2019

  பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தின் காரியாலய அலுவலகர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top